மகளிர் வங்கி
அலுவலகம்:கீழவீதி மஸ்ஜித் காம்ப்ளக்ஸ்,
மெயின் ரோடு, மங்கலம்பேட்டை.
1)துவக்கம்:
2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
2)நோக்கம்:
✓மக்களிடையே சேமிப்பு பழக்கத்தை ஏற்படுத்துதல்.
✓ஏழை மக்களை பொருளாதார ரீதியாகவும்,
சமூக ரீதியாகவும் மேம்படுத்துதல்.
✓உற்பத்தி மற்றும் சிறு தொழிலை ஊக்குவித்தல், வழிகாட்டுதல்.
✓பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், தனிநபர் வருமானம் பெருகவும் வழிகாட்டுதல்.
3)வழிமுறை:
சிறு சேமிப்பு திட்டம் மற்றும் வைப்பு நிதி மூலம் உறுப்பினராக இணைத்தல் உறுப்பினர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கி மாத தவணை முறையில் பணத்தை வசூல் செய்தல்
மங்கலம்பேட்டை பைத்துல் மால்
அலுவலகம்:
கீழவீதி மஸ்ஜித் காம்ப்ளக்ஸ்,
மெயின் ரோடு, மங்கலம்பேட்டை.
துவக்கம்:
2014 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது.
நோக்கம்:
✓பொருளாதார நெருக்கடியின் காரணமாக மிகுந்த சிரமத்தில் இருந்து வரும் ஏழை மக்களின் வறுமையை துடைப்பது.
✓ வறுமையின் காரணமாக கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தடைபடாமல் இருக்க உதவி புரிவது.
✓அனாதைகள், முதியோர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றோர் சிரமங்கள் போக்குவதற்கு உதவி புரிதல்.
கடலூர் மாவட்டம் மங்கலம்பேட்டை இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (ISDFT) அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனை TKYஹெல்த் கேர் கன்சல்டன்சி இனணந்து நடந்திய மாபெரும் இலவச மருத்துவ முகாம் 31-12-2022, சனிக்கிழமை காலை 9:30 மணிக்கு ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியில் .
(ISDFT)
அறக்கட்டளையின்
திட்ட இயக்குநர் மெளலவி ஹாஃபிழ் S.அப்துல்காதிர் ஹசனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவமனையின் பொதுமருத்துவர், கண் காது மூக்கு தொண்டை தோல், போன்ற பல்வேறு மருத்துவர்கள் வருகை புரிந்தார்கள் இந்நிகழ்வில் (ISDFT) அறக்கட்டளை துணை இயக்குநர் B.அபுல்ஹசன், ISDFTயின் அறக்கட்டளையின் அறங்காவலர்களான ஹாஜி M.முஜிபுர் ரஹ்மான், ஹாஜி R.அப்துர்ரவூஃப் ,S.சையது இப்ராஹிம் மெளலவி ஹாஃபிழ் S.அலிபாதுஷா காஷிஃபி மற்றும் மன்பவுல் ஃபுர்கான் ஹிஃப்ழு மதரஸா முதல்வர் மெளலவி ஹாஃபிழ் N.முஹம்மது ஹனீஃப் மன்பயீ மஸ்ஜிதே உம்மா ஹபீபா பள்ளிவாசல் இமாம் மெளலவி M.சிக்கந்தர் ராஜா மன்பயீ உள்ளிட்டவர்கள் மருத்துவ முகாமை ஒருங்கிணைத்தனர்.
மருத்துவ முகாமில்
170 நபர்கள் பங்கேற்று மருத்துவர்களின் ஆலோசனைகளையும் சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டனர்.
(அல்ஹம்துலிலாஹ்…)