ஆயிஷா ரலிய
ல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின்
20 ஆண்டுகாலம் தலைவராக செயல்பட்டு வந்த அல்ஹாஜ் A.முஹம்மது ஹனிபா ஹாஜியார் அவர்கள்.
கடந்த 14-09-2025, ஞாயிற்றுக்கிழமை இறைவனின் அழைப்பை ஏற்றுக்கொண்டார் .
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்)
ஹாஜியார் அவர்கள் வகித்து வந்த தலைவர் பொறுப்புக்கு புதிய தலைவர் தேர்வு செய்வதற்கான
ISDFT அறக்கட்டளையின் நிர்வாகக்குழு கூட்டம் 23-09-2025, செவ்வாய்க்கிழமை காலை 11: 00மணிக்கு மகளிர் ஷரீஅத் கல்லூரியில் நடைபெற்றது.
துவக்கமாக அல்ஹாஜ் A.முஹம்மது ஹனிபா ஹாஜியார் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவரது மறுமை வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.
அதன் பிறகு 2025-28 -ஆம் ஆண்டுக்கான புதிய தலைவர் தேர்வுக்கான ஆலோசனைகள் பெறப்பட்டது.
நிறைவில் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா மகளிர் ஷரீஅத் கல்லூரியின் புதிய தலைவராக ஜனாப். M.S.D.முஹம்மது சலீம்
அவர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
அவரது பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதுடன் அனைத்து நிர்வாகிகள், ஆசிரிய-ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் அவருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் எனகேட்டுக் கொள்கிறேன்.
வஸ்ஸலாம்.
மவ்லவி
டாக்டர் A ஆபிருத்தீன் மன்பயீ,
நிறுவனர் (ம) நிர்வாக இயக்குனர்,
இஸ்லாமிக் சோசியல் டெவலப்மெண்ட் ஃபவுண்டேசன் டிரஸ்ட்,
மங்கலம் பேட்டை -606104.





