இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மங்கலம்பேட்டை ஆயிஷா ரலியல்லாஹூ அன்ஹா அரபிக்கல்லூரியில் சுதந்திரப்போரில் பெண்கள் என்கிற தலைப்பில் மாபெரும் பெண்கள் கருத்தரங்கம் 15-08-2025 அன்று நடைபெற்றது. இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் சுதந்திரப்போரில் பெண்களின் தியாகங்களை நமது தலைமுறையினருக்கு அழகான எடுத்துக்காட்டுடனும், கவிதை மற்றும் கருத்துப்பாடல்களுடன் எடுத்துரைத்தனர். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என திரளாக கலந்துக்கொண்டு வெள்ளையர்களிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை கொல்லையர்களிடம் செல்லாமல் பாதுகாப்பது நம் அனைவரின் கடமை என சபதமேற்று சென்றனர்.